கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 300 இலங்கையர்கள் தொடர்பில் வெளியான புதிய செய்தி!
இலங்கை அகதிகள் 300க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் வியாட்நாமுக்கு இடையே கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக குரல் பதிவு ஒன்று வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் கடலில் மூழ்கும் நிலையில் இருந்து படகு ஒன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர், இலங்கை கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியதாகவும் தெரிவித்ததாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
can anyone confirm pls. https://t.co/2NpXbELBKk
— Frances Harrison (@francesharris0n) November 7, 2022
இந்த நிலையில் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கி அழைத்துச் செல்லப்படுவதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கப்பலில் இலங்கையர் ஒருவர் இருப்பது மட்டுமே இலங்கை கடற்படையினருக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியும்.
இருப்பினும், ஏனையவர்கள் யார் என்ற விடயம் வியட்நாமில் தரையிறங்கிய பின்னரே கண்டறியப்படும் எனவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்திகள்:
300 இற்கும் அதிகமான இலங்கையர்களை நடுக்கடலில் தவிக்கவிட்டு மாலுமி தப்பியோட்டம்!