கிளிநொச்சி - பூநகரி பாடசாலைக்கு படகுச் சேவை
கிளிநொச்சி - பூநகரி, வினாசியோடை பாடசாலைக்கு படகு மூலம் ஆசிரியர்கள் பயணிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக , பூநகரி பிரதேச செயலாளர் ச.கிருஸ்ணேந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் பூநகரி பிரதேச செயலாளர் மேலும் கூறுகையில், வினாசியோடை பாடசாலைக்கு ஆசிரியர்கள் சுயமாகவே சென்று வந்ததாகவும் போக்குவரத்து நெருக்கடி பத்து வருடங்களாக உள்ள நிலையில் அதற்கு தீர்வு காணப்படவில்லை என கூறினார்.
ஒரேயொரு பஸ் மட்டும் கௌதாரிமுனை வரை சென்று வரும் எனத் தெரிவித்த அவர், ஆசிரியர்கள் மோட்டார் சைக்கிளிலேயே சென்று வருவார்கள எனவும் கூறினார்.
'தற்போது வீதியில் களிமண் பரவப்பட்டதன் காரணமாக, எந்த வாகனங்களும் மழை நேரத்தில் பயணிக்க முடியாது. அத்துடன் மழை ஓய்ந்தால் வாகனங்கள் பயணிக்கக் கூடிய நிலைமை ஏற்படும்.
இந்நிலையில், படகு மூலம் ஆசிரியர்களை ஏற்றுவதற்கான ஏற்பாடே தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்திடம் படகு சேவை தொடர்பாக கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கமைய, சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் உள்ள பொலிஸ் காவலரண் பகுதியில் இருந்து நாளை இப்படகுச் சேவையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.