சனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 2 ஆண்டுகளுக்கு சனிபகவானின் அருள்மழை கிடைகவுள்ள ராசிகள்
ஜூன் 5 ஆம் திகதி அன்று, சனி பகவான் தனது வக்ர பெயர்ச்சியை, அதாவது பிற்போக்கு நகர்வை துவக்கியுள்ளார்.
சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்தார். சனி 2024 வரை கும்ப ராசியில் இருப்பார். இருப்பினும், இதற்கிடையில், சில மாதங்களுக்கு, சனி மகர ராசியில் பிற்போக்கு இயக்கத்தில் நகர்வர்.
எனினும், பரவலாகப் பார்த்தால், கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த 3 ராசிக்காரர்கள் 2024 வரை அதிகப்படியான நன்மைகளை காண்பார்கள்.
இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்களுக்கு அதிக பண வரவும், தொழிலில் அதிக முன்னேற்றமும் இருக்கும். அதோடு சனிபகவான் 3 ராசிக்காரர்களிடம் கருணை காட்டுவார். அவையாவன,
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும். அவர்களின் வருமானம் அதிகரிக்கும். வேலை செய்பவர்களின் சம்பளம் உயரும். பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசியினருக்கு லாபம் அதிகரிக்கும். அவர்கள் பெரிய ஒப்பந்தங்களைப் பெறக்கூடிய அனுகூலமான காலமாக இது இருக்கும். பல புதிய வழிகளில் வருமானமும் உண்டாகும்.
வேலை மாற விரும்புபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். நீல ரத்தினம் அணிவதும், சனி பகவான் சம்பந்தமான பரிகாரங்களை செய்வதும் லாபத்தை அதிகரிக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2024 வரையிலான காலம் சிறப்பாக இருக்கும். சனி கர்ம க்ஷேத்திரத்தின் வீட்டில் சஞ்சரிப்பார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களுக்கு நம்ப முடியாத அளவு வெற்றிகள் கிடைக்கும்.
இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். ஒன்றன் பின் ஒன்றாக பல சாதனைகளை இந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு மரியாதை கிடைக்கும். கௌரவம் அதிகரிக்கும். வியாபாரிகளும் ஆதாயம் அடைவார்கள். புதிய யோசனைகளில் ஈடுபடுவதன் மூலம் அதிக லாபம் ஈட்டுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி வரப்பிரசாதமாக அமையும். அனைத்திலும் வெற்றி கிட்டும். தைரியம், வீரம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை இந்த காலத்தில் அதிகரிக்கும்.
இது உங்களுக்கு வேலையில் வெற்றியைத் தரும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். தொழிலதிபர்களும் சிறப்பாகச் செயல்படுவார்கள். எதிரிகளை வெல்வதற்கான சரியான தருணமாக இது இருக்கும்.