52,000 டாலரை தாண்டிய பிட்காயின்; அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்த நாடு!
கிரிப்டோ சந்தையில் முக்கியக் கரன்சியாக விளங்கும் பிட்காயின் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில் எல் சால்வடோர் நாடு செப்டம்பர் 7ஆம் திகதி முதல் அமெரிக்கா டாலர் உடன் அதிகாரப்பூர்வ நாணயமாகப் பிட்காயினை நடைமுறைப்படுத்தியுள்ளது.
உலக நாடுகளில் புதிதாகப் பரவி வரும் கொரோனா தொற்றுக் காரணமாகச் சர்வதேச சந்தையில் நாணயங்களின் மதிப்பு பெரிய அளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இதன் எதிரொலியாகக் கிரிப்டோ சந்தையில் மீண்டும் முதலீட்டு அளவு அதிகரித்துள்ளதாலும், கிரிப்டோ உற்பத்திக்குப் புதுக்கப்பிக்கப்பட்ட மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்தும் காரணத்தால் முன்னணி கிரிப்டோகரன்சியின் மதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இரண்டு முக்கிய அறிவிப்புகள் மூலம் கிரிப்டோ சந்தையில் முக்கியக் கரன்சியாக விளங்கும் பிட்காயின் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கிரிப்டோகரன்சி மதிப்பு கடந்த சில நாட்களாக அதிகளவிலான வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில், கிரிப்டோகரன்சியை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்துள்ள எல் சால்வடோர் நாட்டின் அதிபர் Nayib Bukele ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
எல் சால்வடோர் நாடு பல தடைகளைத் தாண்டி எல் சால்வடோர் நாட்டில் செப்டம்பர் 7ஆம் திகதி முதல் அமெரிக்கா டாலர் உடன் அதிகாரப்பூர்வ நாணயமாகப் பிட்காயினை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதற்காக எல் சால்வடோர் அரசு 400 பிட்காயினை வாங்கியுள்ளதாக அந்நாட்டின் நாட்டின் அதிபர் Nayib Bukele அறிவித்தார். இந்த திடீர் டிமாண்ட் இதன் மூலம் கிரிப்டோ சந்தையில் திடிரென டிமாண்ட் அதிகரித்துள்ள காரணத்தால் பிட்காயின் மதிப்பு 50,577.41 டாலரில் இருந்து 52,912 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. ஆனால் தற்போது ஒரு பிட்காயின் மதிப்பு 50,867.66 டாலருக்கு சரிந்துள்ளது.
53000 டாலரை நெருங்கியது
ஜூலை மாதம் 29,800 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட பிட்காயின் தற்போது 50,000 டாலர் அளவீட்டை தாண்டி 53000 டாலர் அளவீட்டை நெருங்கியுள்ளது. நாணய மதிப்பும், பணவீக்கமும் தொடர்ந்து உலகப் பொருளாதாரப் பாதிப்பைப் பாதித்தால் விரைவில் பிட்காயின் தனது வரலாற்று உச்ச அளவான 64,888.99 டாலர் அளவீட்டை அடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
மாடல் கிம் கர்தாஷியன் பதிவு
கடந்த வாரம் மாடல் மற்றும் தொலைக்காட்சி நடிகையான கிம் கர்தாஷியன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் எதிரியம் மேக்ஸ் என்ற கிரிப்டோ குறித்து விளம்பர பதிவை போட்டார். ஆனால் இந்தக் கிரிப்டோ எதிரியம் காயினைத் தொடர்புடையது அல்ல. கிம் கர்தாஷியன் இன்ஸ்டாகிராம் கணக்கை சுமார் 200 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
பிரிட்டன் வாட்ச்டாக் அமைப்பு இதைக் கவனித்த பிரிட்டன் நாட்டின் நிதியியல் சேவை பிரிவின் கண்காணிப்பு அமைப்பு கிரிப்டோகரன்சி குறித்த விளம்பரங்கள் குறிப்பாக social media influencers செய்யப்படும் விளம்பரங்களைக் கடுமையான அரசு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இளம் முதலீட்டாளர்கள் இந்த விர்ச்சுவல் கரன்சி மற்றும் டோக்கன்களில் முதலீட்டுச் செய்வோர்களில் பெரும் பகுதி புதிய மற்றும் இளம் முதலீட்டாளர்கள். இவர்களை social media influencers மற்றும் பிரபலங்கள் எளிதாக ஈர்க்க முடியும்.
எனவே இப்படி இவர்கள் தவறாக ஈர்க்கப்பட்ட கிரிப்டோவில் முதலீடு செய்தால் அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கிரிப்டோ சந்தை பிரிட்டன் நாட்டின் இந்த அறிவிப்பு சமுக வலைத்தளத்தில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கையாகவும், முதலீட்டாளர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பையும் அளித்துள்ள காரணத்தால் கிரிப்டோ சந்தையில் கூடுதலாக முதலீடு குவித்துள்ளது.
எல் சல்வடோர் நாட்டின் ஒப்புதல்
எல் சல்வடோர் நாட்டின் அதிபர் Nayib Bukele பிட்காயினை நாணயமாகப் பயன்படுத்துவது குறித்து ஜூன் 5ஆம் தேதி அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். இதற்கு எல் சல்வடோர் நாட்டின் நாடாளுமன்றத்தில் சுமார் 84 உறுப்பினர்களில் 62 பேர் ஒப்புதல் அளிக்கப்பட்டு எவ்விதமான தடையும் இல்லாமல் எளிதாக ஒப்புதல் பெற்றது.
எல் சல்வடோர் நாட்டில் சுமார் 70 சதவீத மக்கள் தொகை மக்கள் இன்னுமும் வங்கிக் கணக்கு இல்லாமல் வகைப்படுத்தாத பொருளாதாரத்தில் இயங்கி வருகின்றனர். பிட்காயின் அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவிக்கப்படுவதன் மூலம் இந்த நிலை மாறும் என அனைத்து தரப்பினராலும் நம்பப்படுகிறது.
எல் சால்வடோர் நாட்டு மக்கள் இதுமட்டும் அல்லாமல் எல் சால்வடோர் நாட்டைத் தேர்ந்தவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் காரணத்தால் இவர்கள் ஒவ்வொரு முறையும் சொந்த ஊருக்குப் பணம் அனுப்பும் போது செலவு செய்யும் வரியை இந்தப் பிட்காயின் பயன்பாட்டு மூலம் தீர்க்க முடியும் எனவும் நம்பப்படுகிறது.
உலக வங்கியிடம் உதவி எல் சால்வடோர் நாட்டின் நிதியமைச்சரான Alejandro Zelaya உலக வங்கியிடம் பிட்காயினைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த போதுமான தொழில்நுட்பம் மற்றும் பரிமாற்ற கட்டமைப்பு வசதிகளை அளிக்க உதவிடும் வகையில் ஜூன் மாத இறுதியில் கோரிக்கை வைத்தார்.
எனினும் இதற்கு உலக வங்கி வளரும் நாடுகளுக்கு நிதியியல் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கிடும் சர்வதேச அமைப்பான உலக வங்கி, எல் சால்வடோர் நாட்டின் கோரிக்கை உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் தற்போது பல்வேறு தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளைத் தாண்டி எல் சால்வடோர் நாட்டின் அரசு அமெரிக்க டாலரை அதிகராப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்துவது போலப் பிட்காயினை பயன்படுத்த உள்ளது.