இலங்கையை வந்தடைந்த பறவையும் விலங்கும்
செக் குடியரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மூன்று “ஈமு” பறவைகளும் நான்கு “லீமர்ஸ்” விலங்குகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் செக் குடியரசு இலங்கைக்கு இந்த பறவைகளையும் விலங்குகளையும் நன்கொடையாக வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட பறக்காத் தன்மைக் கொண்ட 4 மாத வயதுடைய "ஈமு" ( Emu) பறவையினங்கள் ஆகும். ரிங் டெயில் லீமர்ஸ் (Ring tailed lemurs) என்பது மடகாஸ்கரை பூர்வீகமாகக் கொண்ட அழிந்துவரும் ஒரு விலங்கினமாகும்.
2 வயதுடைய இரு ஆண் ரிங் டெயில் லீமர்ஸ்களும் 11 வயதுடைய இரண்டு பெண் ரிங் டெயில் லீமர்ஸ்களும் இவ்வாறு இலங்கைக்கு செக் குடியரசினால் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விலங்குகள் துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து நேற்று (06.09.2023) இரவு 9.10 மணியளவில் இலங்கையை வந்தடைந்தன. இந்த விலங்குகள் ஒரு மாதத்துக்கு பின்னர் பின்னவல - வாகொல்ல மிருகக்காட்சிசாலையில் வைத்து பராமரிக்கப்படும்.
பின்னவல- வாகொல்ல மிருகக்காட்சிசாலையின் கால்நடை வைத்தியர் மலித் லியனகே, தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மேனகா பத்திரகே உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்று இந்த விலங்குகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.