தென் கடலில் மீட்கப்பட்ட படகில் பல பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்
இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட மீன்பிடிப் படகில் 100 கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 50 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களின் சுமார் 3 பில்லியன் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேட நடவடிக்கை
திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட குறித்த படகை இன்று (05) பார்வையிட்ட பின்னரே பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர இந்த விபரங்களை வெளியிட்டார்.

படகில் இருந்த போதைப்பொருட்களில் 100 கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 50 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் அடங்குவதாகவும், இதன் மொத்த பெறுமதி சுமார் 3 பில்லியன் ரூபாய் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டில் பதிவு செய்யப்பட்ட இந்த நெடிநாள் மீன்பிடிப் படகு, போதைப்பொருட்களைக் கடத்துவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் நேற்றைய தினம் (04) இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இடைமறித்துப் பொறுப்பேற்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மேலதிக சோதனைகளுக்காகவும் விசாரணைகளுக்காகவும் படகும் அதன் சந்தேகநபர்களும் இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.