டுவிட்டர் நிறுவனத்தில் இந்திய வம்சாவளி நபருக்கு கிடைத்த மிகப்பெரிய பதவி! குவியும் வாழ்த்துக்கள்
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) ஜேக் டோர்சி (Jack Dorsey ) இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், விரிவான கடிதத்தையும் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, கிட்டத்தட்ட 16 அண்டுகள் டுவிட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் முதல் சிஇஓ வரை பல பொறுப்புகளை ஏற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது வெளியேறுவதற்கான நேரம் இது. ஒரு நிறுவனம் நிறுவனர் தலைமையில் இருப்பதன் முக்கியத்துவம் பற்றி நிறைய பேசப்படுகிறது’என டோர்சி கூறியுள்ளார்.
not sure anyone has heard but,
— jack⚡️ (@jack) November 29, 2021
I resigned from Twitter pic.twitter.com/G5tUkSSxkl
Jack Dorsey இராஜினாமா செய்ததை அடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப நிர்வாகி பராக் அகர்வால் (Parag Agrawal) டுவிட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தனது நியமனம் குறித்து அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Deep gratitude for @jack and our entire team, and so much excitement for the future. Here’s the note I sent to the company. Thank you all for your trust and support ? https://t.co/eNatG1dqH6 pic.twitter.com/liJmTbpYs1
— Parag Agrawal (@paraga) November 29, 2021
அதில், டுவிட்டர் தலைமை பதவி தனக்கு கிடைத்த கவுரவம் என்று கூறி உள்ளார். மேலும் டோர்சியின் (Jack Dorsey) தொடர்ச்சியான வழிகாட்டுதல் மற்றும் அவரது நட்புக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஐஐடி பாம்பே மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த அகர்வால், 10 ஆண்டுகளுக்கு முன்பு டுவிட்டரில் சேர்ந்தவர் எனபது குறிப்பிடத்தக்கது.