பிக் பாஸ் வீட்டில் அதிகரிக்கும் மோதல்... மாறி மாறி தலையில் முட்டை உடைக்கும் இசை மற்றும் தாமரை
பிக் பாஸ் சீசன் 5 தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இதில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வானது இசைவாணி மற்றும் தாமரை செல்விக்கு இடையிலான மோதல் தான். இந்த நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை வைத்தார்.
அதிலும் இசைவாணி மற்றும் தாமரைச்செல்வி இடையிலான மோதலை வைத்து பார்வையாளர்களை அதிகரிக்க முடிவெடுத்த பிக் பாஸ் முதல் போட்டியாளர்களாக தேர்வு செய்கிறார்.
அந்த டாஸ்கனது பிக்பாஸ் யாரிடம் கேள்வி கேட்கிறாரோ அவர் சரியான பதிலை சொல்ல வேண்டும். தவறான பதிலை கூறுபவர்கள் எதிரில் இருப்பவர் தலையில் ஒரு முட்டையை உடைக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க்கின் விதிமுறை.
அதன்படி கேட்கப்பட்ட கேள்விக்கு இருவரும் மாறி மாறி தவறான பாதையை கூறி ஒரு தலைமீது ஒருவர் மாறி மாறி முட்டையை உடைத்துக் கொள்கின்றனர்.
இந்த செயலை போட்டியாளர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வார இறுதியில் கமல் நிச்சயம் ஒரு விவாதம் நடத்துவர் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.