பிக் பாஸில் தொடர்ந்து 6 வாரமாக நாமினேட் செய்யப்பட்ட நபர்...இந்த முறை தப்ப முடியாது
பிக் பாஸ் சீசன் 5 கடந்த மாதம் முதல் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேற்ற விரும்பும் 3 சக போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். அப்படி தயாரான இந்த வார நோமினேஷன் லிஸ்ட் தற்போது ரெடியாகி உள்ளது. இதில் ஐக்கி பெர்ரி, அபினை, இசை, பாவனி, சிபி, இமான், தாமரை, நிரூப், அக்ஷரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்ட முதல் வாரத்திலிருந்து தற்போதைய ஆறாவது வரை தொடர்ந்து நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஒரே நபர் அபினை.
அபினை பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து எலிமினேஷன் விளிம்பிலிருந்து தான் காப்பாற்றப்பட்டு வருகிறார். மேலும் வீட்டில் இவரது பங்களிப்பும் மிகவும் குறைவாக உள்ளதாகவே ரசிகர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் உள்ள அபினை வெளியேறவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.