செப்டம்பர் 6 இல் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 ; பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 மிகப் பிரம்மாண்ட தொடக்க விழா வரும் செப்டம்பர் 6 அன்று மாலை 06:00 முதல் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த முறை ஓடிடி தளமான ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்நிகழ்ச்சி ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
உலகநாயகன் கமல்ஹாசனுக்குப் பிறகு பிக்பாஸ் மேடையை அலங்கரித்த விஜய் சேதுபதி, தனது முதல் சீசனிலேயே (சீசன் 9) போட்டியாளர்களைக் கையாண்ட விதம் மற்றும் வார இறுதி நாட்களில் அவர் காட்டிய 'மக்கள் செல்வன்' பாணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
தற்போது பிக்பாஸ் தமிழ் தனது 10 ஆவது சீசனை எட்டியுள்ள நிலையில், விஜய் சேதுபதியின் வருகை இந்த மைல்கல் சீசனை இன்னும் விறுவிறுப்பாகவும், பொழுதுபோக்கு நிறைந்ததாகவும் மாற்றும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னிலையில் வீட்டிற்குள் நுழையப்போகும் பிரபலங்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.