பிக் பாஸில் ஆர்யன் கேட்ட கேள்விக்கு இலங்கை பெண் ஜனனி அளித்த சரியான பதில்!
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
இந்த நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 6யில் யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஏம்மா இதெல்லாம் ஒரு ஜோக்கா மா ?#BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/3P4OaJRBxp
— Biggboss Videos (@Biggboss_videos) October 12, 2022
இந்த நிலையில், இலங்கையை சேர்ந்த ராப் பாடகரான ஆர்யன் தினேஷ், ராபர்ட் மாஸ்டரிடம் விடுகதை ஒன்றை கேட்கிறார். அதில் "ஒரு முட்டை வந்துச்சாம், அது வளர்ந்துக்கிட்டே இருந்து ஒருகட்டத்துல அப்படியே நின்றுச்சாம். ஏன்?" எனக் கேட்க, ராபர்ட் மாஸ்டருக்கு அதற்குள் தூக்கம் வந்து விடுகிறது.
இதனை அருகில் இருந்து கேட்கும் ஜனனி மிகுந்த யோசனையுடன்," அதோட அளவு அவ்ளவுதான்" எனக் கூறுகிறார். இதனை கேட்டு, அதுதான் விடை என ஆர்யன் தினேஷ் தெரிவித்துள்ளார்.