முகம்சுழிக்கும் செயலில் ஈடுபட்ட இலங்கைப்போட்டியாளர்! எச்சரித்த பிக்பாஸ்
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெளிக்கரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியில் 6 சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ள ஏடிகேவை கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து வந்து பிக்பாஸ் அதிரடி எச்சரிக்கையை கொடுத்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இனி அந்த தவறை நீங்க செய்யக் கூடாது என கடுமையாக பிக்பாஸ் எச்சரித்துள்ளார்.
கிட்னியில் கல் பிரச்சனை காரணமாக ஏடிகே மயக்கம் போட்டு விழுந்து மருத்துவ சிகிச்சை பெற்ற நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக அவர் வெளியேறுவாரா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மருத்துவ சிகிச்சை பெற்று மீண்டும் திரும்பி வந்த ஏடிகே தொடர்ந்து விளையாடி வருகின்றார்.
கிட்னியில் கல் பிரச்சனை காரணமாக ஏடிகே மயக்கம் போட்டு விழுந்து மருத்துவ சிகிச்சை பெற்ற நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக அவர் வெளியேறுவாரா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மருத்துவ சிகிச்சை பெற்று மீண்டும் திரும்பி வந்த ஏடிகே தொடர்ந்து விளையாடி வருகின்றார்.
இவ்வாறான நிலையில், இன்று ஏடிகேவை கன்ஃபெஷன் ரூமிற்கே அழைத்து பிக்பாஸ் கடுமையாக எச்சரித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஏடிகே அப்படி என்ன தப்பு பண்ணார் என்றும் ஏன் பிக்பாஸ் இப்படியொரு எச்சரிக்கை கொடுத்துள்ளார் என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.
பிக்பாஸ் வீட்டில் ஸ்மோக்கிங் ரூம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இவ்வாறான நிலையில், சிகரெட் பிடிப்பதால் ஏடிகே உடல் நலத்திற்கு கேடு வருகிறது என மருத்துவர்கள் எச்சரித்த நிலையில், அதையும் மீறி ஏடிகே தொடர்ந்து புகை பிடித்து வருவதால் தான் உள்ளே அழைத்து பிக்பாஸ் எச்சரித்துள்ளார்.
இனியும் மருத்துவர்கள் அறிவுரையை கேட்காமல் நீங்க சிகரெட் பிடிப்பது தெரிய வந்தால் உடனடியாக உங்களை இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்ப நேரிடும் என்றே அதிரடியாக எச்சரிக்கை பிக்பாஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உடல்நலம் மற்றும் மனநலம் என இரண்டுமே ஏடிகேவுக்கு சுத்தமாக சரியில்லை என்றும் அவர் வெளியே செல்வது தான் அவரது உடல்நலத்துக்கு நல்லது என்றும் ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.