பிக்பாஸ் ரசிகர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!
இந்திய அளவில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் ஜுலை மாதம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில், 7-வது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனை தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும், மறுபக்கம் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள கமல்ஹாசனின் சம்பளம் தொடர்பாக பேசப்பட்டு வருகின்றன.
மேலும், கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.75 கோடி சம்பளம் வாங்கிய கமல், தற்போது 7-வது சீசனை தொகுத்து வழங்க ரூ.130 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
எனினும் இந்த தகவல் எதுவரையில் உண்மை என்பது தெரியவில்லை.