மைனா நந்தினியின் உறவினரா இந்த பிக்பாஸ் போட்டியாளர்? வைரலாகும் புகைப்படங்கள்
தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் மைனா நந்தினியின் மாமன் மகனும் இதே சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் மைனா நந்தினி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இதே நிகழ்ச்சியின் இன்னொரு போட்டியாளரான பாடகர் ஏடிகே மைனாவின் மாமன் மகன் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அது மட்டுமின்றி ஏடிகேவின் முன்னாள் மனைவி மற்றும் மகன் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஏடிகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜாஸ்மின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அபியான் என்ற ஒரு மகன் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.
இந்த நிலையில் தற்போது ஏடிகே தனது முன்னாள் மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது .
பாடகர் ஏடிகே, கவுதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘சோக்காலி’ என்ற பாடல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.
அதன்பின்னர் ’ரஜினி முருகன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடினார் என்பதுன்ம் தனி ஆல்பங்களிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் அவர் பாடி வருகிறார்.