ஜனனியால் கண்கலங்கிய போட்டியாளர்கள்!
பிக் பாஸ் 6 வீட்டில் கதை சொல்லும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
கதை சொல்லி முடித்தால் நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என்று பிக் பாஸ் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து தன் கதையை சொல்லியபோதே வாய்ப்பு முடிந்துவிட்டது என்று அசீமிடம் கூறி பிக் பாஸ் கூறியதை அடுத்து ஜனனி தன் கதை கூற தொடங்கி உள்ளார்.
"என்னை பார்க்கிற ஆட்கள் எல்லாம் இந்த புள்ள சிரிச்சுக்கிட்டே இருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது. இவளுக்கென்ன பிரச்சனை இருக்கும் என்பார்கள். ஆனால் அப்படி எல்லாம் இல்லை.
நான் படித்துக் கொண்டிருந்தபோதே வீட்டை பார்த்துக்கொள்ளும் நிலைமை வந்துவிட்டது. வேலைக்கு போனேன். ஒரு கட்டத்தில் பள்ளிக்கூடம் போக முடியவில்லை என்று கூறியுள்ளார்."
அவர் கதையை முடிக்கும் முன்பே வாய்ப்பு முடிந்துவிட்டதாக தெரிவித்தார் பிக் பாஸ். இதையடுத்து ஜனனியும் அழுதுவிட்டார்.
ப்ரொமோ காணொளியை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,
அடுத்த வாரம் வெளியே போகப் போவது தெரியாமல் தனலட்சுமி ஓடி வருவதை பாரு. போர் நடந்த நேரத்தில் பிறந்திருக்கிறார் ஜனனி. அதனால் அவரின் வலியை புரிந்துகொள்ள முடிகிறது என தெரிவித்துள்ளனர்.