காரணமின்றி ஜனனியை சிறைக்கு அனுப்பிய பிக்பாஸ்; பாவம் ஒருபக்கம் ... பழி ஒருபக்கமா!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் தற்போது வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை கடக்க உள்ளது.
இதில் போட்டியாளர்களிடையே நாளுக்கு நாள் சண்டை, கோபம், அழுகை என உணர்ச்சிகளும் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் நிகழ்ச்சி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
தற்போது இதில் ரேட்டிங் டாஸ்க் இடம்பெறும் போட்டியாளர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் இடம் பெற்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.
சிறையில் ஜனைனும் ராமும்
அதில் ஜனனியும் ராமையும் சிறைக்கு அனுப்பியுள்ளார் பிக்பாஸ்.
இந்த நிலையில் சண்டை போட்டவர்கள் வெளியில் இருக்க எதுவும் செய்யாத நாம் ஏன் சிறைக்கு அனுப்பட்டோம் என ஜனனியும் ராமும் அங்கலாய்க்கும் புரமோ வெளியாகியுள்ளது.
#Day12 #Promo3 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/UthA4xFdS1
— Vijay Television (@vijaytelevision) October 21, 2022
இந்நிலையில் அவர்கள் இருவருக்கு மட்டுமல்லாது பிக்பாஸ் ரசிகர்களுக்கும் இது பேரதிர்ச்சியாக உள்ளது.