பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட்கார்ட் போட்டியாளராக நுழையும் நபர்! வெளியான தகவல்
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 6.
இந்த நிகழ்ச்சி 57 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
அத்தோடு பிக்பாஸ் சீசன் 6யின் டைட்டில் பட்டத்தை வெல்ல போட்டியாளர்கள் தற்போது தீவிரமாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்த நிலையில் கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்ற குயின்ஸி வெளியேறினார்.
இவ்வாறு இருக்கையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு பதிலாக ஒரு வைல்ட்கார்ட் போட்டியாளர் எண்ட்ரி ஆக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வரவிருக்கும் போட்டியாளர் லிப்ரா புரடொக்சன்ஸ் ரவீந்திரன் தயாரித்த படத்தில் நடித்ததாகவும் இவர் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும் என்றும் கூறப்படுகின்றது.