பிக்பாஸ் தனலட்சுமிக்காக கண்ணீர் விட்டு உணர்ச்சிவசமாக பேசிய ரசிகர்!
தமிழில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
இந்நிகழ்ச்சியின் 6 சீசன் அண்மையில் நிறைவுபெற்றது. இதில் அசீமை வெற்றியாளராக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.
இதனையடுத்து, சமீபத்தில் பிக்பாஸ் கொண்டாட்டத்திலும் அனைத்து போட்டியாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் அசீம் மற்றும் தனலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது இவருடைய ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டு கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
அதற்கு அசீம் மற்றும் தனா பதிலும் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் தனக்கு இத்தனை சதவீத ஓட்டுகள் கிடைத்தது தனலட்சுமி மற்றும் மணிகண்டா ஆகியோர் உள்ளே இல்லாததன் காரணமாகத்தான் என அசீம் குறிப்பிட்டார்.
ஒருவேளை அவர்கள் உள்ளே இருந்திருந்தால் தனக்கு வெற்றி கிடைத்து இருக்கும் அதேவேளையில் இத்தனை சதவீத ஓட்டுகள் கிடைத்திருக்காது என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் தனலட்சுமியிடம் பேசுகையில்,
"நான் எந்த நடிகருக்கும் fan கிடையாது. ஆனா உங்களை ரொம்ப பிடிக்கும். நீங்க கெஸ்ட்டா பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்தபோது ADK உங்களை வச்சு அராத்துன்னு பாடுனாரு. அது உங்களுக்கு தெரியுமா?" என கேள்வி எழுப்பினார். அப்போது தனக்கு தெரியாது என தனலட்சுமி பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அந்த இளைஞர், "அதைப்பத்தி யாருமே கேக்கல. உங்களுக்கு ஒரே நண்பர் ஆயிஷா மட்டும்தான். ஆனா அவங்களும் பொம்மை டாஸ்க்ல உங்களுக்கு உதவி பண்ணல. அவங்களும் பின்னாடி பேசி இருக்காங்க.
பிக்பாஸ் 6 சீஸனும் பார்த்திருக்கேன். உங்களை மாதிரி ஒரு போட்டியாளரை பார்த்தது இல்ல. உங்க எவிக்ஷனுக்கு மட்டும் தான் அழுதேன். நீங்க இந்த நிகழ்ச்சிக்கு வருவீங்கன்னு எனக்கு தெரியாது. எனக்கே ஆச்சரியமாக இருந்துச்சு. உங்களை பார்த்தா அழுதுடுவேன்னு எனக்கு தெரியும்.
உங்களை பார்த்தது ரொம்ப சந்தோசம். நீங்க நல்லா வரணும்" என உணர்ச்சிவசத்துடன் பேசினார். அப்போது அவருக்கு நன்றி தெரிவித்து பேசிய தனலட்சுமி தனக்கு இப்படிப்பட்ட உண்மையான ரசிகர்கள் கிடைத்ததே பெரும் மகிழ்ச்சி என்றார்.