அழகில் லாஸ்லியாவை தூக்கி அடிக்கும் யாழ் ஜனனி; பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!
விஜய் டிவியில் ஒளிப்பரப்படும் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸில் இலங்கையை சேர்ந்த ஒருவர் போட்டியாளராக வருவது வழக்கம். ஏனெனில் அப்போதுதான் புலம் பெயர் இலங்கையர்களும் நிகழ்வை ஆர்வமுடன் பார்ப்பார்கள் என விஜய் டிவி கணித்துள்ளது.
அவர்கள்து கணிப்பை இதுவரை புலம்பெயர் தமிழர்கள் பொய்யாக்கியதுஇல்லை. அந்தவகையில் லாஸ்லியா தர்சனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி பிக்பாஸ் 6 இல் கள இறங்கியுள்ளார்.
நிகழ்ச்சிக்குள் நுழைந்த அன்றே ரசிகர்கள் பலரின் கவனத்தை ஜனனி ஈர்த்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
யார் இந்த ஜனனி?
21 வயதான ஜனனி குணசீலன் இலங்கையின் புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் டிக்டாக் மூலம் சமூக வலையத்தளங்களில் பிரபலமாகியதோடு, சில குறும்படங்களிலும் நடித்ததுடன், ஐபிசி தமிழ் சேனலில் தொகுப்பாளராக இருந்தார்.
இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 18.3k பின் தொடர்வதுடன் இவர் இலங்கையில் ஒரு மாடலாகவும் இருந்து வருகிறார்.
ஜனனி ஆர்மி
அதேவேளை இலங்கையில் பாரம்பரியத்திற்கும் பெருமைக்கும் பெயர் போன யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜனனி, தமிழ் சினிமா மற்றும் சிறிய திரை தொலைக்காட்சி துறையில் நன்கு அறியப்பட்ட கலைஞர்களுடன், அவர்களுக்கு பரிட்சயமே இல்லாத ஜனனி போட்டியிட்டு நாட்டிற்கு பெருமை சேர்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
அதேவேளை லாஸ்லியாவை கொண்டாடியதுபோல தற்போதே ஜனனிக்கு ஆர்மி தொடங்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.
அதுமட்டுமல்லாது ஜனனியின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அழகில் லாஸ்லியாவையே தூக்கி அடித்துவிடுவார் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர் .