ரசிகரின் கேள்விக்கு சர்ச்சையான பதிலை அளித்த பிக்பாஸ் போட்டியாளர்!
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.
நேற்றைய நிகழ்ச்சியில் "50 நாட்கள் ஆகிவிட்டது, தைரியமா விளையாடுங்க என தற்போதும் சொல்ல வேண்டியதா இருக்கு" என கமல்ஹாசன் போட்டியாளர்கள் எல்லோரையும் விமர்சித்து இருந்தார்.
எல்லோரும் safe game ஆடுகிறீர்கள் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
இருப்பினும், அதன் பின் பார்வையாளர்கள் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் ஒரு பகுதியும் நேற்றைய எபிசோடில் வந்தது.
மைனா நந்தினி மற்றும் ரச்சிதா ஆகிய இருவரிடமும் கேள்வி கேட்ட ஒருவர் 'உங்க paid holidays' எப்படி இருக்கு என கேள்வி கேட்டார்.
அத்தோடு அதன் பின் இன்னொருவர் மைனா மணிகண்டா ஆகியோர் நட்பு என்கிற பெயரில் அறுவெறுப்பு செய்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
கேள்விகளுக்கு பதில் அளித்த மைனா 'நான் பண்றது பிடிச்சா சப்போர்ட் பண்ணுங்க, இல்லனா வெளியே கொண்டு வந்துடுங்க' என தெரிவித்து இருந்தார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த வாரம் இவர் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது எனக் கூறி வருகிறார்கள்.