பிக்பாஸ் பெண் போட்டியாளருக்கு திருமணமா? அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனையும் கடந்த மாதம் வெற்றிகரமாக ஓடி முடிந்தது.
இவ்வாறான நிலையில். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4ஆம் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர்தான் ஷிவானி நாராயணன்.'
இவர் அந்த சீசனின் சக போட்டியாளரான பாலாவுடன் காதல் வசப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருந்த நிலையில் ஷிவானிக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் வரத் தொடங்கின.
அந்தவகையில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்து இருந்தார். மேலும் ஆர்.ஜே பாலாஜி நடித்த வீட்ல விசேஷம் படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனையடுத்து தற்போது 'பம்பர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். கேரள லாட்டரி பற்றிய கதையம்சத்தைக் கொண்ட இப்படத்தில் ஷிவானி நடிகர் வெற்றிக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.
இவ்வாறான நிலையில், இன்ஸ்டாகிராமில் அதிகம் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிற ஷிவானி தற்போது வழக்கத்திற்கு மாறாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் கமெண்டில் அவருக்கு திருமணம் என்று நினைத்து மாப்பிள்ளை யார் என்று கேட்டு வாழ்த்துக்கள் சொல்ல தொடங்கி விட்டார்கள்.
எனினும், இது போட்டோஷூட்டிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் தான் எனப் பின்னர் அவர்களுக்கு தெரியவந்துள்ளது.