பிக்பாஸ் பிரபலம் ஜனனி இலங்கை வந்துவிட்டாரா! வைரலாகும் புகைப்படங்கள்
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காடசிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடி முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் இலங்கைப் பெண் ஜனனி.
பிக்பாஸ் வீட்டிற்குள் தன்னுடைய விளையாட்டை சிறப்பாக விளையாடிவந்த ஜனனி சில விடயங்களில் தேவை இல்லாமல் கோவப்பட்டததாலும், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று எதிர்பாராத விதமாக வெளியேறினார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் இலங்கைக்கு செல்ல முடியாத அளவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்பட்டாலும், மிகவும் கவனமாக கதையை தேர்வு செய்து நடிக்க ஜனனி சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடித்தி வருவதாக தகவல் வெளியாகி இருந்தன.
மேலும், சமூக வலைதளத்தில் மிகவும் ஆர்வமாக இருப்பதோடு, தன்னுடைய அழகிய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றார்.
அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் இலங்கையில் எடுத்த மாதிரி உள்ளது.
அதைப் பார்த்த ரசிகர்கள் இலங்கை வந்து விட்டீர்களா..? என இஸ்டாகிராமில் கேட்டு உள்ளார்கள்.