பல கோடி மதிப்புள்ள போர் விமானங்களை இழந்த அமெரிக்கா ; சத்தமில்லாமல் ஈரான் செய்த சம்பவம்
ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க விமானப்படையின் ஐந்து, 'கே.சி., - 135' ரக எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதமடைந்துள்ளன. உலக அளவில் பல சக்தி வாய்ந்த போர் விமானங்களை கொண்ட நாடாக இருக்கிறது அமெரிக்கா.
பல நாடுகளுக்கு போர் விமானங்களை ஏற்றுமதி செய்து வரும் அமெரிக்கா, ஈரான் போரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள விமானங்களை இழந்துள்ளது.

போர் விமானங்கள்
அதன்படி போர் தொடங்கியபோது குவைத்தில், மூன்று, 'எப் - 15' ரக விமானங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டன. இதைத் தொடர்ந்து நேற்று அமெரிக்காவின் கே.சி., - 135 ரக எரிபொருள் நிரப்பும் விமானம் ஈராக்கில் விபத்துக்குள்ளானது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்ப இந்த எரிபொருள் நிரப்பும் விமானங்களையே அமெரிக்கா பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், சவுதி அரேபியாவில், இளவரசர் சுல்தான் விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து கே.சி., 135 ரக விமானங்கள், ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் சமீப நாட்களில் நடைபெற்றதாகவும், விமானங்கள் தரையில் இருந்தபோது தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், விமானங்கள் பகுதியாக சேதமடைந்துள்ளதாகவும், முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது அவை பழுதுபார்க்கும் பணிகளில் உள்ளதாகவும், இந்த தாக்குதலில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.