முதன்முறையாக தனது காதலனை வெளிப்படுத்திய பிக்பாஸ் பெண் பிரபலம்!
பிரபல தொலைக்காட்சியில் தமிழ் சீரியலில் ரசிகர்களைக் கவரும் விதமாக கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபல்யமான நடிகை ஆயிஷா.
ஆயிஷா தமிழில் ஒளிபரப்பான சத்யா என்னும் சீரியலில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.
இதன் பின்னர் அண்மையில் ஒளிபரப்பாகி முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீமுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தார். அதில் அவர் தனது சொந்த வாழ்க்கை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதை ரகசியமாகவே வைத்திருந்தார்.
ஆயிஷா இருமுறை விவாகரத்து பெற்றவர் என முன்னாள் காதலர் கொடுத்த பேட்டி வைரல் ஆன நிலையிலும் அது பற்றி ஆயிஷா தரப்பு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது ஆயிஷா அவரது காதலர் போட்டோவை வெளியிட்டு காதலர் தின வாழ்த்து கூறி இருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
மேலும் இவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்த போது அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும், என்ன படம் யாருடைய படம் என்பது குறித்து சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.