இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை
ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
கட்டாரின் தோஹாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா ஏ அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களைப் பெற்றது. அபிஷேக் சர்மா 63 பந்துகளில் 78 ஓட்டங்களையும், ஷஹ்பாஸ் அஹமட் 48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

வெற்றி இலக்கு
இதனையடுத்து 318 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 41.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 318 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியைப் பதிவு செய்தது.
சினெத் ஜயவர்தன வெறும் 62 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 70 பந்துகளை எதிர்கொண்ட அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 6 பிரமாண்ட சிக்ஸர்கள் அடங்கலாக 105 ஓட்டங்களைக் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம் ; தகாத உறவால் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு தந்தை செய்த மோசமான சம்பவம்
மறுமுனையில் லசித் குரூஸ்புள்ளே 98 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 107 பந்துகளில் 116 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
இலங்கை ஏ அணி 41.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 318 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியைப் பதிவு செய்தது.