பிக் பாஸ் வீட்டில் அடங்காத தாமரைச்செல்வி....அறிவுரை வழங்கிய ராஜு
பிக் பாஸ் வீட்டில் சிறி பிரச்சினையை கூட தற்போது மிகவும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
அதில் ஒன்று தான் காயின் டாஸ்க் இதில் ஸ்ருதி தாமரை செல்வியிடமிருந்து தெரியாமல் எடுத்துள்ளார். இது ஒரு பெரிய பிரச்சினையாக சென்றுள்ளது. இந்த நிலையில் தற்போது அதனை மனதில் வைத்து கொண்டு தாமரைச்செல்வி இன்னுமும் குத்திக்காட்டி பேசி வருகிறார்.
இது பற்றி ராஜு தாமரை செல்விக்கு அறிவுரை வழங்கியுள்ளார். கதவை திறந்து விட்டால் வெளியே போய் என்ன பண்ணுவ என்று கேட்கிறார். அதற்கு தாமரை மீண்டும் நாடகத்திற்கு போவேன் என்று சொல்கிறார். உடனே ராஜு ரொம்ப எதார்த்தமா இருக்கிறதா நெனப்பா என்றும், இந்த வீட்ல இருக்கிறவங்களுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். ஆனால் நீ அடிக்கடி கத்துவதை பார்த்தால் எல்லோருக்கும் உன் மேல் வெறுப்பு வரும் என்கிறார்.
அத்துடன் வெளியில் பார்க்கும் மக்களுக்கு நீ சரியாக நடந்தாலும் தப்பாகவே தெரியும் என்று அறிவுரை கூறுகிறார்.
ராஜுவின் இந்த பேச்சு மிகவும் சரியானது. தன்னை வெகுளியாக காட்டிக்கொண்டு தாமரை செய்யும் சில விஷயங்கள் சற்று ஓவராக தெரிகிறது.