பிக்பாஸ் சீசன் 5 ; 18 போட்டியாளர்களின் முழு விபரம் இதோ!

details contestants bigg boss seson 5
By Sulokshi Oct 04, 2021 06:56 AM GMT
Report

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்றையதினம் ஆரம்பமாகிவிட்டது. அந்த வகையில் இந்த முறையும் இலங்கையை பின்புலமாக கொண்ட ஜேர்மன் வாழ் பெண் உட்பட 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்ச்சிக்காக ஆவலோடு காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யுமா பிக்பாஸ் 5 ஆவது சீசன் என்பது போகப்போகத்தான் தெரியும். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள அந்த 18 போட்டியாளர்கள் பற்றிய முழு விபரம் இதோ,

இசை வாணி;

பிக்பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக கானா பாடகராக இசை வாணி நுழைந்தார். 100 சிறந்த பெண்கள் பட்டியலில் இடம் பெற்றவர். பெண் கானா பாடகர் என்பதாலேயே கச்சேரிக்கு 7 மணிக்கு போனால் 10 மணிக்கு பாட சொல்லுவாங்க என அவர் தன்னைபற்றி  கூறியுள்ளார்.

ராஜு;

இவர் விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்துள்ளார். ராஜு மிமிக்ரி ஆர்டிஸ்டாக தொடங்கி, சின்னத்திரையில் நடிகராகி தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக நுழைய உள்ளார்.

மதுமிதா;

பிக் பாஸ் 5-ன் மூன்றாவது போட்டியாளராக ஜெர்மனியை சேர்ந்த மதுமிதா களமிறங்கியுள்ளார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தற்போது ஆடை வடிவமைப்பாளராகவும் மாறியிருக்கிறார். மாடலிங்கில் மிகுந்த ஆர்வமுடைய மதுமிதா, தமிழ் பொழுதுப்போக்கு துறையிலும் தற்போது கால் பதித்திருப்பதாகக் கூறினார்.

அபிஷேக் ராஜா;

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நான்கவது போட்டியாளராக தொகுப்பாளர் மற்றும் யூடியூப்பரான அபிஷேக் ராஜா சென்றுள்ளார். என்னால பிக்பாஸ்ல என்ன நடக்க போகுதுனா ஒருத்தன் பிக்பாஸ்ல ஜெயிச்சா வாழ்க்கையில பயங்கரமா வரலாம்ன்னு காட்டப்போறான் என்று அபிஷேக் ராஜா கூறுகிறார்.

நமிதா மாரிமுத்து;

ஐந்தாவது போட்டியாளராக திருநங்கையான நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். மிஸ் சென்னை டூ மிஸ் வேல்ர்ட் ஆக 5 வருஷம் ஆகியிருக்கு என நமிதா மாரிமுத்து கமல்ஹாசினிடம் பகிர்ந்துக்கொண்டார்.

பிரியங்கா தேஷ்பாண்டே;

பிக்பாஸ் வீட்டின் ஆறாவது போட்டியாளராக விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளரான பிரியங்கா ( Priyanka Deshpande ) உள்ளே செல்கிறார். எனக்கு விமானத்தில் பணிப்பெண் ஆக வேண்டும் என்று தான் ஆசை, ஆனால் காலேஜில் பிபிஏ படிக்க போய், விஸ்காம் படிச்சேன். வீட்டுக்குள்ள நான் மற்றவங்களை லிஃப்ட் பண்ண போறன்னா, இல்ல என்ன மற்றவங்க லிஃப்ட் பண்ண போறங்களானு பார்ப்போம் என பிரியங்கா  தெரிவித்தார்.

அபிநய்;

பிரம்மாண்டமாக தொடங்கி நடைப்பெற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் 7வது போட்டியாளராக அபிநய் உள்ளே நுழைகிறார்.நடிகையர் திலகம் சாவித்திரி மற்றும் ஜெமினி கணேசனின் பேரனான அபிநய் புதுவிதமான விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு உதவுவது உள்ளிட்ட சமூகம் சார்ந்த விஷயங்களை செய்து வருவதாக கமலிடம் பகிர்ந்துக்கொண்டார்.அபிநய்க்கு கமல்ஹாசன் மாமன் முறை என்றும் கமல் கூறினார். அபிநயின் மனைவி மற்றும் மகள் வீடியோ மூலம் கால் மூலம் அபிநய்க்கு வாழ்த்து கூறினார்கள்.

பவானி ;

பிக்பாஸ் வீட்டின் எட்டாவது போட்டியாளராக சீரியல் நடிகையான பாவனி( pavni)வீட்டிற்கு செல்கிறார். எனக்கு 23வயதில் கல்யாணம் பண்ணிக்கணும் என்று ஆசை இருந்தது. எல்லாமே நல்லா போயிட்டு இருந்துச்சு, திடீரென எனது கணவன் தற்கொலை பண்ணிடாங்க.எனக்கு கல்யாண வாழ்க்கை நல்ல அமையல என்று வருத்தமாக பகிர்ந்துக்கொண்டார்.

சின்ன பொண்ணு;

பிக்பாஸ் வீட்டின் 9வது போட்டியாளராக நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு பிபி வீட்டிற்குள் நுழைந்தார்.சந்திரமுகி படத்தில் நான் தோன்றிய பின்பு தான் மரியாதையே கிடைத்தது என்று பகிர்ந்துக்கொண்டார்.

நடியா சங்;

மலேசியா மாடலான பிக்பாஸ் வீட்டினுள் 10வது போட்டியாளராக செல்கிறார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது.நான் 14வது வயதிலிருந்து வேலை செய்கிறேன். என்னுடைய பில்லரே எனது கணவர் தான் என்று பகிர்ந்துக்கொண்டார் நடியா சாங் பகிர்ந்துக்கொண்டார்.

நடிகர் வருண்;

பிக் பாஸ் இல்லத்தில் 11வது போட்டியாளராக நுழைந்தார். நான் யார் என்பதை நிரூபிக்க இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்ததாக கூறினார்.

இமான் அண்ணாச்சி;

பிக்பாஸ் வீட்டின் 12வது போட்டியாளராக நகைச்சுவை நடிகர் மற்றும் தொகுப்பாளரான இமான் அண்ணாச்சி செல்கிறார். சின்ன வயதிலிருந்தே எனக்கு கஷ்டம் தான். தினமும் யாரையாவது சிரிக்க வைக்கணும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்படி சிரிக்க வைக்கும் போது தான் ஒருவர் என்னிடம், இங்க பண்றத சென்னையில போய் பண்ணு என்று கூற, நானும் சென்னை வந்து வாய்ப்பு தேடினேன். ஆனால் அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.

மாடல் சுருதி;

13வது போட்டியாளராக மாடல் சுருதி பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார். நான் நேஷனல் லெவல் கூடைப்பந்து வீரர் . ஸ்போட்ஸ் ஸ்காலர்ஷிப்ல தான் படிச்சேன். எல்லாரும் என்ன பாத்து ஊர்லேந்து தான் வந்திருக்கும்னு பேசுவாங்க. ஆனால் யாராவது என்னால பண்ண முடியாது என்று சொன்னால், அதை கண்டிப்பா பண்ணனும்னு தோணும். எல்லாமே வாழ்க்கையில ஒரு பாடம் தான் என கூறினார்.

அக்‌ஷரா;

சுருதியைத் தொடர்ந்து மற்றொரு மாடலான அக்‌ஷராவை கமல்ஹாசன் வரவேற்றார். அதன் பின்பு இருவரிடமும் மாடலிங்கை பற்றி கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன் என்று கேட்ட கமல்ஹாசன், அவர்களை ராம்ப் வாக்கும் செய்து காட்டும்படி கேட்டார்.பின்பு இருவரும் ஒன்றாக சேர்ந்து பிக்பாஸ் வீட்டிற்கு சென்றனர்.

ஐக்கி பெர்ரி;

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15வது போட்டியாளராக மாஸா எண்ட்ரி கொடுத்தார் ஐக்கி பெர்ரி. மருத்துவம் படித்துவிட்டு ராப் இசையில் கலக்கும் ஐக்கி பெர்ரி என்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூர் எனக்கூறி கமல்ஹாசனை ஐக்கி பெர்ரி ஆச்சரியப்படுத்தினார்.வீட்டிற்குள் ஐக்கி பெர்ரி சென்றதும் நமிதா மாரிமுத்து சிரித்துக்கொண்டே வரவேற்றார்.

தாமரை செல்வி;

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16வது போட்டியாளராக தாமரை செல்வி செல்கிறார்.பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு முத்து சிற்பி பாட, தாமரை செல்வி நடனமாடினார்.நான் கிட்டத்திட்ட 22 வருஷமா இந்த துறையில் இருக்கேன். என்னுடைய குழந்தைகளோட என்னால் இருக்கவே முடியாது. காலையில 5 மணிக்கு போயிட்டு மறுநாள் 11 மணிக்கு தான் வருவேன் என்று கூத்து கலைஞர்களின் கஷ்டத்தை பகிர்ந்துக்கொண்டார்.

சிபி ;

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் மாணவனாக நடித்த சிபி பிக்பாஸ் வீட்டின் 17வது போட்டியாளராக வீட்டிற்குள் செல்கிறார். நான் நல்ல சம்பளம் வர வேலைய விட்டுட்டு சினிமாவில் நுழைந்தேன். மாஸ்டர் படம் இல்லன்னா நான் என்ன ஆயிருப்பேன்னு எனக்கு தெரியல. ஒரு விஷயத்த செய்றத்துக்கு முன்னாடி பல தடவை யோசிப்பேன், ஆனால் செய்ய ஆரம்பித்த பின்பு யோசிக்கமாட்டேன் என்று சிபி கூறினார்.

நிரூப்;

பிக்பாஸ் வீட்டின் 18வது போட்டியாளராக நிரூப் வீட்டினில் செல்கிறார்.நான் அடுத்தவங்களுக்காக எதாவது பண்ணனும்னு நினைச்சேன். பிக்பாஸ்னால என்னால மாற்றத்த கொண்டு வர முடியும் என நினைக்கிறேன் என சிபி கூறியுள்ளார். 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, ஜேர்மனி, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US