பிக்பாஸ் சீசன் 5 ; நிறைவடையும் நாள் எப்போது தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 5வது சீசன் நேற்றைய தினம் (அக்டோபர் 3) தொடங்கியுள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .
இதுநாள் வரை போட்டியாளர்கள் என சமூக வலைதளங்களில் சுற்றிய விவரத்தில் சிலரின் தகவல் உண்மையாகியுள்ளதுடன் பல புதுமுகங்களும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்துள்ளனர். எனினும் இம்முறை பிக்பாஸ் சீசன் 5 இல் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள பலர் மக்களுக்கு பரீட்சயப்படாதவர்களாக உள்ளனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஆரம்பித்து காலை முதல் 2 புரொமோக்கள் வெளியாகிவிட்டது, இரண்டுமே மிகவும் கலாட்டாவாக இருக்கிறது.
தற்போது என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த இறுதி நாள், பைனல் நிகழ்ச்சியானது ஜனவரி 16, 2022ம் ஆண்டு நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.