பிக்பாஸ்5 ; தமிழ் ரசிகர்களுக்கு ஏஞ்சலாக மாறிய இலங்கைப்பெண் மதுமிதா!
பிக் பாஸ் இளைஞர்களின் ஏஞ்சலாக மாறி இருக்கிறார் இலங்கை பின்னனி கொண்ட ஜெர்மனியில் இருந்து வந்த மதுமிதா ரகுநாதன்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளாவிய ரீதியில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்தவகையில் தமிழில் 4 சீசன்கள் வெற்றிக்கரமாக முடிந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது.
வெளிநாட்டு வாழ் தமிழர்களின் வரவேற்பை அதிகரிக்க ஒவ்வொரு சீசனிலும் சில வெளிநாட்டு வாழ் தமிழ் போட்டியாளர்கள் பிக் பாஸில் பங்கேற்க வைக்கப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் மலேசியாவில் சீரியல் மற்றும் மாடலிங்கில் பிஸியாக இருந்து வரும் நாடியா சாங் பிக்பாஸில் பங்கேற்று இருந்தார். அதே போல் ஜெர்மனியில் மாடலாகவும் பேஷன் டிசைனராகவும் இருந்த இலங்கை பின்னனி கொண்ட மதுமிதா ரகுநாதன் போட்டியாளராக கலந்து கொண்டார்.

மதுமிதா தற்போது பிக் பாஸ் வீட்டில் பெரிதாக விளையாடி சூப்பர் ஃபெப்ஃபாமர் என பெயர் எடுக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் ஏஞ்சலாகவே தெரிகிறார். அவரின் குரலும், தமிழும், பாட்டு பாடு விதமும், அவரை எல்லோரும் கலாய்க்கிறார்கள் என தெரிந்தும் அதை டேக் இட் ஈஸி என கடந்து செல்லும் இடங்களில் ரசிகர்களை கவர வைக்கிறார் .
மதுமிதா பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஜெர்மனியில் தான். மதுமிதாவுக்கு பேஷன் என்றால் ரொம்ப இஷ்டம், அதனால் தான் பேஷன் டிசைன் படித்து முடித்தபிறகு அக்காவுடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்றார்.
அங்கு ஒரு மிகப் பெரிய கம்பெனியில் டிசைனர் ஏஜென்சியாக வேலை செய்தார். ஆனால் விசா காரணத்தால் ஜெர்மனிக்கு திரும்ப வந்துவிட்டார். ஜெர்மனியில் ஐடி படிப்பை தொடரும் போது காதல் ஏற்பட்டு அந்த உறவால் மன அழுத்தம் எற்பட்டு தற்கொலை முயற்சி வரை சென்று இருக்கிறார் மதுமிதா.

அதன் பின்பு அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு திரும்பவும் டிசைனில் கவனம் செலுத்த தொடங்கினார். அத்துடன் பல கம்பெனிகளில் விளம்பர மாடலாகவும் மதுமிதா பணி புரிந்துள்ளார்.
இவரின் நெருங்கிய தோழி பாடகி தீ. இவர் மூலம் தான் மதுமிதாவுக்கு பிக் பாஸில் வாய்ப்பு கிடைத்ததாகவும் தகவல் வெளியாகின. எனினும் அதன் உண்மை நிலவரம் பற்றி தெரியவில்லை.
இந்நிலையில் டிவியை பார்த்தே தமிழ் பேச கற்றுக் கொண்ட மதுமிதா, இன்று பிக் பாஸ் வீட்டில் முடிந்த வரை தமிழில் பேசி கமலிடம் பாராட்டும் பெற்றுள்ளார். அதேவேஎளை அவர் , பிக் பாஸ் இளைஞர்களின் ஏஞ்சலாகவும் மாறி இருக்கிறார் .