பிக்பாஸ் 5 ; பிரியங்காவை நோஸ் கட் செய்த கமல்! செம கச்சேரி இருக்கு; ஆவலுடன் ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய 2வது புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நிகழ்ச்சியில் ஒரு அபிஷேக் ராஜாவின் அட்டகாசமே ரசிகர்களை இரிடேட் செய்து வரும் நிலையில், இன்னொரு அபிஷேக்காக பிரியங்கா போட்டு வரும் ஆட்டம் ரொம்பவே அதிகமாகி விட்டது.
எந்தவொரு ரூல்ஸையும் மதிக்காமல் இஷ்டத்துக்கு கேம் ஆடலாம் என பிரியங்கா ஆடி வருவது ரசிகர்களை எரிச்சலைடைய செய்துள்ளது.
கடந்த வாரம் அபிஷேக், பிரியங்கா, நிருப் என பல போட்டியாளர்கள் பிக் பாஸ் விதிகளை மீறியது குறித்து கேட்க வேண்டும் என்றும் இந்த ஷோவை முறையாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.
அக்ஷரா பேப்பரில் எழுதி ஃபிளஷ் செய்தது குறித்து பப்ளிக்காக பேசி அவரை அவமானப்படுத்தி அழ வைத்த பிரியங்காவிடம் அந்த பஞ்சாயத்தை பற்றி பேசிய கமல், "பிரியங்காவுக்கு அக்ஷரா எழுதி காட்டியது குறித்த விமர்சனம் இருந்தது" என்றதும் அக்ஷராவை மறுபடியும் அழ வைக்கலாம் என நினைத்து "ஏன்னா க்ளியரா சொல்லி இருந்தாங்க யாரை பத்தியும் இது பண்ணக் கூடாது" என தவளை தன் வாயால் கெடும் என்பதற்கேற்ப பிரியங்கா வான்டட்டாக வந்து கையில் சிக்கிக் கொண்டார்.
உடனே இடை மறித்து பேசிய கமல் "விமர்சகர்கள், நாம சரியா இருக்கோமான்னு ஃபர்ஸ்ட் பார்க்கணும்.. நீங்க அந்த மாதிரி செஞ்சதே இல்லையா" என கேட்க அரங்கத்தில் இருந்த அத்தனை பேரும் கை தட்டி பிரியங்காவை கமல் பஞ்சராக்கியதை கண்டு உற்சாகமடைந்தனர்.
"நான் எதையும் எழுதி காட்டல சார்" என பிரியங்கா பம்ம.. "நீங்க நிருப் கையில எழுதி காட்டனத அனைவரும் பார்த்தோம் ... அதுக்குத்தான் இந்த கைதட்டல்.. அக்ஷராவுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் விதிகள் பொதுவானது என பிரியங்காவை கமல் நோஸ் கட் செய்த புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இன்னைக்கு செம கச்சேரி இருக்கு என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதுக்குப் பேர் தான் சரியான 'நோஸ் கட்' என புரமோவை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்ததுடன், கடைசியில் பிரியங்காவின் முகம் பீஸ் போன பல்பு போல மாறியதை பார்த்து கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுனீங்க பிரியங்கா என மீம்களை போட்டு வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.