பிக்பாஸ் சீசன் 5; இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா?
பிக்பாஸ் சீசன் 5 விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது. வீட்டில் உள்ள போட்டியாளர்கள் வாரம் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் போட்டியாளராக மலேசியாவை சேர்ந்த நாடியா சாங் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் பிரியங்கா, பாவனி ரெட்டி, அக்ஷரா, தாமரைச்செல்வி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபினய், சின்ன பொண்ணு மற்றும் அபிஷேக் ராஜா ஆகிய 9 பேர்கள் உள்ளனர்.
இவர்களில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, அபினய் மற்றும் இசைவாணி ஆகியோர்களில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் நாமினேஷனில் உள்ள 9 போட்டியாளர்களில் மிக அதிகமாக அக்ஷராவும் அதனை அடுத்து பிரியங்கா, பாவனி ரெட்டி, தாமரை ஆகியோர் பெற்றிருப்பதாக உறுதியற்ற தகவல்கள் கூறுகின்றன.
அந்தவகையில் இந்தவாரம் அபிஷேக் வெளியேற்றப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.