எரிபொருள் நெருக்கடியால் இலங்கைக்கு இப்படியொரு நிலையா...மக்களுக்கு மேலுமொரு பேரிடி
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் தற்போது பெரும்பாலான மக்கள் தமது போக்குவரத்துக்கு சைக்கிள்களையே பயன்படுத்துகின்றனர்.
தற்போது துவிச்சக்கர வண்டி ஒன்றின் விலை 40,000 ரூபாவை நெருங்கியுள்ளதால் அதற்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தநிலையில், தற்போது சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென மவுண்டன் சைக்கிள் சங்கத்தின் தலைவர் அமல் சூரியகே தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி மற்றும் துவிச்சக்கர வண்டிகளின் விலையேற்றம் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் இருக்கும் பழைய சைக்கிள்களை சரிசெய்து பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும் சந்தையில் சைக்கிள் உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சைக்கிள் உதிரிபாக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரிஸ்மி இஸ்மத் தெரிவித்தார்.
துவிச்சக்கர வண்டிகளின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், துவிச்சக்கரவண்டி இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியை எதிர்காலத்தில் காண்பிக்கவுள்ள நிவாரணப் பொதியில் இருந்து நீக்க வேண்டும் என சர்வதேச சைக்கிள் ஓட்ட சம்மேளனத்தின் நடுவர் என்.கருணாரத்ன தெரிவித்துள்ளார்.