மாணவனிடம் மோசமாக நடந்துகொண்ட பிக்குவுக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான உத்தரவு!
பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியான பௌத்த பிக்குவுக்கு கண்டி மேல் நீதிமன்றம் 17 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்க தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கு இன்றைய தினம் (29.05.2023) நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
16 வயது பாடசாலை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குறித்த தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் மற்றும் 31 ஆம் திகதிக்கு இடையில் பன்விலதென்ன பிரதேசத்தில் குற்றவாளி, மாணவனை வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
முதலாவது குற்றத்திற்கு 7 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, 10 ஆயிரம் ரூபா அபரத்தையும் செலுத்துமாறு உத்தரவிட்டார்.
அபராதத்தை செலுத்த தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து, 2அவது குற்றத்திற்கு 10 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, 15 ஆயிரம் அபராத்தையும் விதித்துள்ளார்.
7 மற்றும் 10 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனைகளை ஒரே தடவையில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட மாணவனுக்கு 250,000 ரூபா இழப்பீட்டை செலுத்த வேண்டும் எனவும் குற்றவாளியான பௌத்த பிக்குவுக்கு உத்தரவிட்டுள்ளார்.