பிரதேசவாசிகளால் அடித்து விரட்டப்பட்ட பிக்கு; காரணம் என்ன?
வெசாக் தினத்தன்று 12 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்து, விகாரையில் சங்கவாச கட்டிடத்தில் பொக்கிஷங்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில், விகாரையிலிருந்து துரத்தப்பட்ட பிக்கு ஒருவர்,நேற்று (14) பலவந்தமாக விகாரைக்குள் பிரவேசிக்க முற்பட்ட போது பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டதாக தெஹிஅத்தகண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின்போது பிக்குவுடன் வந்த சில குண்டர்கள் , கிராம மக்களோடு முரண்பட்ட போது , பிக்குவும் மற்றுமொருவரும் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை
தெஹியத்தகண்டிய புதிய மெதகம நகரில் கடந்த 8 ஆம் திகதி வெசாக் தினத்தன்று பிக்கு , கிராமத்தில் உள்ள 12 வயது சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் குழுவொன்று அமைதியான முறையில் போராட்டம் நடத்தியது.
இந்தச் பிக்கு , கிராமத்தில் மதுவுக்கு அடிமையான சிலருடன் சங்கவாசம் வைத்துள்ளதாக தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பிரிவைச் சேர்ந்த பிக்குகளுக்கு அந்த விடயம் தெரியப்படுத்தியதையடுத்து, பிக்கு விகாரையை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த பிக்குவை மீண்டும் விகாரையில் இருக்க விடுவது சிறுவர்கள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்ட கிராமத்தவர்கள், பிக்குவை விகாரையில் வைக்க எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இவ்வாறானதொரு சூழலில் நேற்று (14ம் திகதி) மாலை மீண்டும் விகாரைக்குள் நுழைய முயன்ற பிக்கு பிரதேச மக்களால் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.