NPP உறுப்பினரின் மருமகள் செய்த மோசடி ; சபையில் அம்பலப்படுத்திய சாமரசம்பத்
ஜப்பான் அனுப்புவதாகக் கூறி தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் மருமகள் பல இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமரசம்பத் சபையில் ஆதாரத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸில் முறைப்பாடுகள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களை ஊழல்வாதி என்கிறார்கள். கொள்ளையடிப்பவர்கள் என்கிறார்கள். களவாடுகிறோம் என்று சொல்கிறார்கள்.
ஆனால் தலங்கமே பகுதியைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் மருமகள் ஜப்பான் அனுப்புவதாக ஒரு முகவர் நிலையத்தை நடத்தி வருகின்றார்.
குறித்த நபர்களின் மோசடி தொடர்பில் பொலிஸில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பணத்தைப் பெற்றுக்கொள்ள சட்டத்தரணிகளுடன் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளனர்.
நான்சொன்னது தவறு எனில் அடுத்த தவணையில் நிரூபித்துக் காட்டுங்கள். மக்கள் தங்கள் காணிகளை ஈடு வைத்தும் கடன் வாங்கியும் 20 லட்சம், 30 லட்சம் ரூபா எனக் கொடுத்தார்கள். இதற்கு ஒரு முறைப்பாடுகளையும் பொலிஸார் எடுத்துக்கொள்ளவில்லை.
மருந்தைக்கூட பெற முடியாமல் கஸ்ரப்படும் மக்களிடமிருந்து காசுகளைப் பெற்றுக்கொள்கின்றார்கள். ஓய்வூதியத்தை நிறுத்துவது போல இதனையும் நிறுத்துங்கள் எனத் தெரிவித்தார்.