பிக் பாஸ் வீட்டில் ராஜூவை திட்டிய பாவனி
தமிழ் தனியார் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த வீட்டில் நாளுக்கு நாள் ப்ரஸாஹனைகளும் வளர்ந்து கொண்டு தான் செல்கிறது. அதே சமயம் இந்த சீசனில் அனைத்து ரசிகர்களும் பாராட்டிய போட்டியாளர்கள் பாவனி மற்றும் ராஜு இவர்கள் இருவருக்கும் தற்போது ரசிகர்கள் ஆதரவு உள்ளது.
ராஜு பொருத்தவரை சில விஷயங்களை வெளிப்படையாக கூறாமல் மனதிற்குள்ளே வைத்து காய்நகர்த்தலில் வல்லவர் தான் இதனை பல போட்டியாளர்களும் கூறியுள்ளனர். மற்ற போட்டியாளர்கள் தங்களது உண்மை முகத்தை கோபத்தின் மூலம் காட்டுகிறார்கள் ராஜு அப்படி இல்லாமல் வெளிப்படையாக அனைவரிடமும் பேசுவது ஏதாவது ஒரு பிரச்சினைக்கும் மட்டும் நியாயமாக குரல் கொடுப்பது போன்று பிம்பம் காட்டி வருகிறார்.
இதனால் ரசிகர்கள் ராஜு உண்மையாக இருக்கிறாரா என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது அன்மையில் வெளியான பிக் பாஸ் ப்ரோமோவில் பாவனி ராஜூவை போடா என திட்டுவது போன்ற காட்சி இடம்பெற்றது. இதனால் இந்த வாரம் இருவருக்கும் இடையிலான பிரச்சினையே பெரிதாக பேசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.