பரதநாட்டிய அவதூறு ; மன்னிப்புக் கோரிய உலமா சபை!
பரதநாட்டிய அவதூறு விவகாரம் தொடர்பில் அகில இலங்கை உலமா சபை மன்னிப்புக் கோரியுள்ளது.
மதம் மற்றும் கலாசார விழுமியங்கள் நிந்திக்கப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானதும் கண்டனத்திற்குரியதுமாகும் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.அர்கம் நூராமித் தெரிவித்தார்.
பரதநாட்டியம் தொடர்பில் மௌலவி அவதூறு
பரதநாட்டியம் தொடர்பில் மௌலவி ஒருவர் தவறாக பேசிய விடயம் தொடர்பில் சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அகிலஇலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு மாளிகாவத்தை ஜம்இய்யதுல் உலமா தலைமைக் காரியாலத்தில் இன்று நடைபெற்றது.

சவூதி அரேபியாவிற்கு சென்ற தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! நாடு திரும்பியதும் அம்பலப்படுத்திய உண்மைகள்
இதன்போதே உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.அர்கம் நூராமித் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் ஊடகவியலாளர் மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முக்கியஸ்தர்கள், இந்துமத தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.