சீன அமைச்சர் மற்றும் ஜனாதிபதி இடையே இடம்பெற்ற உரையாடல் என்ன?
சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சரும், அரச ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான வாங் யியின் சந்திப்பு, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 65 வருட கால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தியது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொரோனா காலத்தில் சீனா அளித்த உதவிக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். தனது இலங்கை விஜயம் தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சீன வெளிவிவகார அமைச்சர், நெருங்கிய நண்பன் என்ற வகையில் சீனாவின் ஒத்துழைப்பு எப்போதும் கிடைக்கும் என ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
கொவிட் தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக கடனை திருப்பிச் செலுத்துவதில் கவனம் செலுத்தினால் நாட்டில் பெரும் நிவாரணம் கிடைக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
சீனாவுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த வாங் யீ, எதிர்வரும் காலங்களில் அது நிறைவேற்றப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.