தெஹிவளையில் முற்றுகையிடப்பட்ட விடுதி; வெளிநாட்டு பெண்கள் உட்பட 7 அழகிகள் கைது
தெஹிவளையில் இணையதள விளம்பரங்கள் மூலம் பெண்களை விற்பனை செய்த விடுதி முற்றுகையிடப்பட்டு 5 இந்தோனேஷிய பெண்கள் உட்பட 7 பெண்களை தெஹிவளை பொலிசார் கைது செய்தனர்.
அத்துடன் விடுதி மேலாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு மாதமாக அந்த இடத்தில் குறித்த விடுதி இயங்கி வருவதாகவும், ஒன்லைன் ஊடாக அழகிகளை முன்பதிவு செய்ததாகவும், ரூ .10,000 முதல் ரூ. 30,000 வரை அழகிகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கைப் பெண்களும் 23 மற்றும் 39 வயதுடையவர்கள். வெள்ளவத்தை மற்றும் பாணந்துறையில் வசிப்பவர்கள் என்றும் கூறப்படுகின்றது. அத்துடன் ஐந்து இந்தோனேசியப் பெண்களும் 20-40 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வெளிநாட்டு பெண்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து தங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.