எண்ணிலடங்காத இஞ்சியின் மருத்துவ குணங்கள்!
சமையலறையில் இன்றியமையாத பொருளாக பயன்படுத்தப்படும் இஞ்சி உணவின் சுவையை அதிகரிப்பதோடு மருத்துவ குணங்களும் நிறைந்தது.
இருமல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து நம்மை காக்கிறது உடலை உள்ளே இருந்து வெப்பமாக்கி நன்மை பயக்கும் இஞ்சியின் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை.
அத்தோடு தீவிர நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. சமீபத்தில் உணவு முறை உயிரியலுக்கான ஆய்வில் இரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதில் ஒரு சிறிய அளவு இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறியுள்ளது.
மருத்துவ குணங்கள்
இஞ்சியில் உள்ள அபரிமிதமான மருத்துவ குணங்களால் உலகம் முழுவதும் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இஞ்சி டீ குடித்த அரை மணி நேரத்திற்குள், அதன் கலவைகள் இரத்தத்தில் சேரும் என்று தெரியவந்துள்ளது.
அவை இரத்தத்தை அடைவதன் மூலம் வெள்ளை இரத்த அணுக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கின்றன.
இஞ்சியை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
இதயத்தை நோய்களில் இருந்து பாதுகாக்கிறது
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இது நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
இதனுடன் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. இது இரத்த லிப்பிட்களை குறைக்கிறது. இதனால் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது
இஞ்சியில் உள்ள செல்களைப் பாதுகாக்கும் பண்புகள் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. செல்லுலார் செயல்பாட்டை குறைக்கிறது. இது குறித்து இன்னும் நிறைய ஆய்வுகள் செய்து, மேலும் விபரங்களை பெற வேண்டியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எடை குறைக்க உதவும் இஞ்சி
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், உடல் எடையை குறைக்க இஞ்சி சிறப்பாக செயல்படுகிறது என தெரியவந்துள்ளது. இதை சரிவிகித உணவாக உட்கொள்வது நன்மை பயக்கும்.