தினமும் காலையில் ஏலக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
ஏலக்காய் சமையலில் நறுமணத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருள் மட்டுமல்ல; பாரம்பரியமாகப் பல்வேறு ஆரோக்கியப் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏலக்காயைத் தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது கொதிக்கவைத்தோ தயாரிக்கும் ஏலக்காய் தண்ணீரை காலையில் குடிப்பது சிலரின் அன்றாடப் பழக்கமாக உள்ளது.

ஏலக்காயில் ஆன்டிஒக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்ட தாவரக் கலவைகள் காணப்படுகின்றன. இவை உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவக்கூடும். தினமும் காலையில் ஏலக்காய் தண்ணீர் குடிப்பதால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. தினமும் காலையில் ஏலக்காய் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

செரிமானத்தை மேம்படுத்த உதவும்
காலையில் வெறும் வயிற்றில் ஏலக்காய் தண்ணீர் குடிப்பதால் வயிறு இலகுவாக இருக்கும். இது வாயு மற்றும் அமிலத்தன்மையைக் குறைக்கிறது. மேலும், இது செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

உடல் எடை குறைக்கும்
ஏலக்காய் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும், இது உடலில் உள்ள தேவையற்ற நீரின் அளவைக் குறைப்பதன் மூலம் உடல் எடை குறைப்பிற்கும் நன்மை அளிக்கிறது.

அழற்சி எதிர்ப்புப் பண்புகள்
வெப்பத்தால் வாய்ப் புண்கள் ஏற்பட்டால் ஏலக்காய் நீர் பயனுள்ளதாக இருக்கும். அதன் குளிர்ச்சி மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள், வாயில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து, புண்களை விரைவாகக் குணப்படுத்த உதவுகின்றன.

வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும்
ஏலக்காய் கிருமி நாசினி பண்புகளைக் கொண்டுள்ளதுடன், உடலில் ஏற்படும் வீக்கம், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகளைக் குறைக்கவும் உதவுகிறது. இதைத் தொடர்ந்து உட்கொள்வது வெள்ளைப்படுதலின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

முடி உதிர்தலை குறைக்கும்
அதிகப்படியான வெப்பம், பித்தநீர் அதிகரிப்பு அல்லது ஊட்டச்சத்துக் குறைபாடுகள் காரணமாக முடி உதிர்தல் ஏற்படலாம். ஏலக்காய் நீர் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கிறது, இரத்தத்தில் உள்ள நச்சுக்களைக் குறைக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது முடியின் வேர்களில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தி, முடி உதிர்தலைக் குறைக்க உதவுகிறது.
