காலையில் எழுந்ததும் மாதுளம் பழ ஜூஸ்; இத்தனை நன்மைகளா?
ஆரோக்கியம் சிறப்பாக இருக்க காலையில் எழுந்ததும் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு உணவுகளை இயற்கை நமக்கு அளித்துள்ளது. அதில் ஒன்று தான் மாதுளம் பழ ஜூஸ்.
காலையில் உணவு உண்ண நேரம் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில் பலரும் ஜூஸ்களை குடிக்க விரும்புவார்கள.
அதுவும் மாதுளம் பழ ஜூஸை காலை உணவின் போது குடிப்பது மிகவும் நல்லது.
மாதுளம் பழத்தில் ஆன்டி.ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக இருப்பதால் இது ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கிறது மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
அதோடு இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளதால் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
மாதுளம் பழம் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தையும் சீராக பராமரிக்க உதவி புரிகிறது. இதுப்போன்று ஏராளமான நன்மைகள் மாதுளம் பழ ஜூஸை தினமும் குடிப்பதால் கிடைக்கும்.
புற்றுநோயைத் தடுக்கும்
மாதுளம் பழ ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. இவை உடலுக்கு பல நன்மைகளை விளைவிக்கின்றன.
முக்கியமாக இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் ப்ரீ ராடிக்கல்களால் செல்களில் ஏற்படும் சேதத்தைக் குறைப்பதோடு, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
எனவே புற்றுநோய் வரக்கூடாதெனில் தினமும் மாதுளம் பழ ஜூஸைக் குடியுங்கள்.
இதயத்திற்கு நல்லது
மாதுளம் பழ ஜூஸ் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக இந்த ஜூஸ் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
தினமும் மாதுளம் பழ ஜூஸைக் குடித்து வந்தால் அது இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் ப்ளேக்குகள் மற்றும் கொலஸ்ட்ரால்கள் வளர்வதைத் தடுத்து இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது.
இரத்த அழுத்தம் குறையும்
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் அது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
தினமும் மாதுளம் பழ ஜூஸை குடித்து வருவது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவி புரியும்.
நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன.
இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன.
இதில் உள்ள வைட்டமின் சி ஆன்டிபாடி உருவாக்கத்தை மேம்படுத்தி, உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
அதோடு அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், ஆபத்தான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் ஈஸ்ட் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
செரிமான மண்டலம் மேம்படும்
செரிமான பிரச்சனைகளை அதிகம் சந்திப்பவர்கள், தினமும் மாதுளை ஜூஸைக் குடிப்பது நல்லது.
மாதுளையில் சிக்கலான பி வைட்டமின்கள் உள்ளன.
இந்த வைட்டமின்களானது, உடலில் உள்ள கொழுப்புக்கள், புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களை ஆற்றலாக மாற்றுகிறது.
அதோடு இதில் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு தேவையான நார்ச்சத்துக்களும் உள்ளன.
எனவே மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் மாதுளை ஜூஸை தினமும் குடித்து வர அப்பிரச்சனையானது உடனே சரியாகும்.
எடை இழப்புக்கு உதவும்
மாதுளம் பழ ஜூஸ் உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரியக்கூடியது.
மாதுளை சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை அளிக்கக்கூடிய பழம். ஏனெனில் இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள் உள்ளன.
இது சர்க்கரை வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
அதுவும் இதில் உள்ள பாலிஃபீனால்கள் உடலில் தேங்கியுள்ள கொழுப்பு செல்களை எளிதில் உடைத்தெறிய செய்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.