தினமும் ஒரு பேரிக்காயா? எத்தனை நன்மைகள்னு தெரியுமா
பேரிக்காய் இனிப்புச் சுவையைக் கொண்டதோடு வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழமும் ஆகும்.
சொல்லப்போனால் ஆப்பிளை விட மிதமான அளவிலான பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
அதோடு வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், காப்பர் போன்ற சத்துக்களும் உள்ளன.
சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்
பேரிக்காய் சாப்பிடுவதால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் பேரிக்காயில் சோடியம் குறைவு.
எனவே இந்த பழத்தை உட்கொள்ளும் போது அது சிறுநீரக நோய்களைத் தடுக்கும்.
அதுவும் ஏற்கனவே சிறநீரக நோய் இருப்பவர்கள் பேரிக்காயை உட்கொள்ளும் போது அது டயாலிசிஸ் செய்ய வேண்டியதைத் தடுப்பதோடு விரைவில் சிறுநீரக நோயில் இருந்து மீள உதவி புரியும்.
எனவே சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால், பேரிக்காயை தினமும் சாப்பிடுங்கள்.
குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
பேரிக்காயில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன.
இவை செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான சத்துக்களாகும்.
ஒவ்வொரு பேரிக்காயிலும் சுமார் 6 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது ஒருநாளைக்கு வேண்டிய நார்ச்சத்தில் 22% ஆகும்.
நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் போது குடலில் உள்ள கழிவுகளை எளிதில் மலக்குடலில் நகர்ந்து சிரமமின்றி கழிவுகளை வெளியேற்ற உதவி புரியும்.
இதன் விளைவாக குடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
முக்கியமாக பேரிக்காயை தோலோடு சாப்பிட வேண்டும். ஏனெனில் அதன் தோலில் தான் அந்த நார்ச்சத்து உள்ளது.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம்
பேரிக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. எனவே பேரிக்காயை தினமும் உட்கொள்ளும் போது அது நாள்பட்ட அழற்சியால் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது.
பேரிக்காயில் ஃப்ளேவோனாய்டுகள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன.
இவை உடலினுள் உள்ள அழற்சியை எதிர்ப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, நோய் தாக்குதல்களைத் தடுக்கிறது.
எனவே உடலினுள் ஏற்படும் அழற்சி அல்லது காயங்கள் சரியாக வேண்டுமானால், பேரிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுங்கள்.
புற்றுநோயை எதிர்க்கும்
பேரிக்காயில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதுவும் இதில் உள்ள அந்தோசையனின்கள் மற்றும் சினாமிக் அமிலம் போன்றவை புற்றுநோயை எதிர்த்துப் போராடும்.
ஒருவர் தங்களின் உணவுகளில் பேரிக்காய் போன்ற பழங்களை தினசரி உணவில் சேர்த்து வந்தால் அது வயிறு, நுரையீரல், சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்றவற்றை எதிர்த்து பாதுகாக்கும்.
கூடுதலாக இதில் உள்ள ப்ளேவோனாய்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை எதிர்த்து பாதுகாப்பளிக்கிறது.