எண்ணெயின் அற்புத குணங்களும் தீமைகளும்
உண்ணும் உணவுகளில் எண்ணெய் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.
உண்ணும் உணவுகளில் இருந்து எண்ணெய் பிரித்து எடுத்தும் உண்ணப்படுகின்றது.
சருமத்திற்கும், உடல் இயக்கத்திற்கும் எண்ணெய் வஸ்துக்கள் நண்மைகளை அளிக்கிறது.
எண்ணெய் வகைகள்
எள்ளிருந்து பிரித்தெடுக்கப்படும் நெய்யை எள் எண்ணெய் என்றும் அழைகின்றனர்.இவ் எள் எண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு இதனை குளிக்கும் போது தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம் என்று கூறப்படுகின்றது.
அனைவராலும் தினமும் பயன்படுத்தப்படும் எண்ணெய்யாக தேங்காய் எண்ணெய் உபயோகிக்கப்படுகின்றது.
இதில் கொழுப்பு அதிகப்படியாக காணப்படுவதால் கொழுப்பு சக்தியை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தேங்காய் எண்ணெயை தவிர்க்க வேண்டும் என கூறப்படுகின்றது.
இது உடலில் உள்ளே வெளியே உள்ள புண்களை ஆற்றும் சக்தியை கொண்டுள்ளது.
வாய்ப்புண், அல்சர், கர்ப்பப்பைபுண், புற்றுநோய் உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம் என கூறப்படுகின்றது.
அளவுக்கு அதிகமான கொழுப்பை கொண்டது கடலை எண்ணெய் என்று கூறப்படுகின்றது. இதனை அளவுக்கு அதிகாமாக உணவில் சேர்த்து கொள்ள கூடாது.
இருதய நோய், இரத்த அழுத்த நோய் உடையவர்கள் மற்றும் உடல் பருமனாக உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
உடலின் வறட்சி காரணமாக சிலருக்கு தோல் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறது.அதானல் இதற்கு தீர்வாக விளக்கெண்ணெய் பயன்படுகின்றது.
அத்தோடு ஆசன வாய் கடுப்பு, வயிற்றில் இரைப்பு போன்ற நோய்கள் உள்ளவர்கள் அதனை பயன்படுத்தலாம்.
பெண்களுக்கு முலைக்காம்படு புண், முலைவெடிப்பு உள்ளவர்கள் இதனை பயன்படுத்த குணமாகும் என கூறப்படுகின்றது.
உடல் சூட்டினால் அல்லது தூசுக்களினால் கண்கள் சிவந்து கப்பட்டால் தாய்ப்பாலுடன் விளக்கெண்ணெய் கலந்து கண்களில் விட சிவப்பு நீங்கும்.
சிறந்த கிருமி நாசினியாக வேப்பெண்ணெய் பயன்படுகின்றது.
அத்தோடு இது உடலுக்கு நன்மை விளைவிக்கும் எந்த பாக்டீரியாக்களுக்கு எந்த ஆபத்தும் விளைவிக்காது.
இது அதிகளவான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.
இதனை தினமும் 5 மில்லிகிராம் வரை உண்ணலாம் என கூறப்படுகின்றது.