ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த யாசகர்! புத்தளத்தில் சம்பவம்
புத்தளம் மாவட்டம் - முந்தல் பிரதேசத்தில் ரயில் மோதி யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (05-09-2022) இடம்பெற்றுள்ளது.
புத்தளத்திலிருந்து இன்று மாலை கொழும்பு நோக்கிப் பயணம் செய்த பயணிகள் ரயிலில் மோதியே குறித்த யாசகர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தலுக்கும் – மங்கள எளிய பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் குறித்த யாசகர், ரயில் பாதைக்கு அருகே நின்றுகொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்த குறித்த யாசகரின் சடலம், ரயில் ஊழியர்களால் முந்தல் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யாசகர் யார் என்பது தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.