பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களின் சம்பளம் எவ்வாளவு தெரியுமா? வெளியான விபரம்
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்களை கொண்டது பிக்பாஸ். இதுவரை 4 சீசன்கள் நிறைவடைந்த நிலையில் 5-வது சீசன் அதிக எதிர்பார்ப்புக்களுடன் ஒக்டோபர் 3 ஆம் திகதி கோலகலமாக துவங்கியது. மேலும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த 4 சீசன்களை போல் இந்த சீசனிலும் சினிமா பிரபலங்களே அதிகம் இருப்பார்கள் என கணக்கு போட்டு, சினிமா பிரபலங்கள் பலரின் பெயர்கள் அடங்கிய பட்டியல்கள் பல சமூக வலைதளங்களில் வலம் வந்தன. ஆனால் பிக்பாஸ் டீம் தங்களுக்கே உரிய தனி பாணியில், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று அறிமுகம் இல்லாத பல புதிய முகங்களை போட்டியாளர்களாக அறிவித்தனர்.
பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் சம்பளம்:
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பளம், அதிக சம்பளம் பெறுபவர் போன்ற விபரங்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக போட்டியாளர்கள் எத்தனை நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்களோ அத்தனை நாட்களுக்கு கணக்கிட்டு சம்பளம் வழங்கப்படுவதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது.
அதிக சம்பளம் யாருக்கு?
ஆனால் தற்போது வெளியாகும் தகவல் படி, நாள் கணக்கிற்கு சம்பளம் வழங்கப்படுவது இல்லையாம். ஒரு வாரத்திற்கு இவ்வளவு என சம்பளம் பேசப்பட்டு தான் போட்டியாளர்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இவர்களில் அதிக சம்பளம் யாருக்கு என விபரங்கள் வெளியாகியுள்ளது. இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் சம்பளம் பற்றிய பட்டியல் இதோ:
- இசைவாணி - ரூ. 1 லட்சம்
- ராஜு ஜெயமோகன் - ரூ.1.5 லட்சம்
- மதுமிதா - ரூ.2.5 லட்சம்
- அபிஷேக் ராஜா - ரூ.1.75 லட்சம்
- நமிதா மாரிமுத்து - ரூ.1.75 லட்சம்
- பிரியங்கா தேஷ் பாண்டே - ரூ.2 லட்சம்
- அபினய் - ரூ.2.75 லட்சம்
- பாவனி ரெட்டி - ரூ.1.25 லட்சம்
- சின்ன பொண்ணு - ரூ.1.5 லட்சம்
- நாடியா சாங் - ரூ.2 லட்சம்
- வருண் - ரூ.1.25 லட்சம்
- இமான் அண்ணாச்சி - ரூ.1.75 லட்சம்
- அக்ஷரா ரெட்டி - ரூ.1 லட்சம்
- சுருதி - ரூ.70,000
- ஐக்கி பெர்ரி - ரூ.70,000
- தாமரைச் செல்வி - ரூ.70,000
- சிபி - ரூ.70,000
- நிரூப் - ரூ.70,000
இதேவேளை இந்த சம்பள விபரம் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. இது பற்றி உறுதியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை என்றாலும், சமீபத்திய தகவல்கள் இந்த சம்பள விபரத்தை இணையத்தில் கசித்துள்ளன.