கோட்டா கோ கமவிற்குச் சென்ற மஹிந்த ஆதரவாளர்கள் பரபரப்பு; போர்க்களமான மைனா கோ கம!
மஹிந்த ஆதரவாளர்கள் பொலிஸாரின் தடைகளை மீறி காலிமுகத்திடலை நோக்கி முன்னேறிச் சென்றுள்ளதனால் பரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காலிமுகத்திடலை நோக்கிச் சென்ற மஹிந்த ஆதரவாளர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் கூறுகின்றன. மஹிந்த ஆதரவாளர்கள் கலகம் அடக்கும் பொலிஸாரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம், காலிமுகத்திடலிலும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரைப் பிரயோகிக்கும் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அலரி மாளிகையில் இருந்துச் சென்ற மஹிந்த ஆதரவாளர்களால் மைனா கோ கமவில் போராட்டக்காரர்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில் மைனா கோ கம தற்போது போர்க்களமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அலரி மாளிகையில் கோசமெழுப்பிய போராட்டக்காரர்கள் “காலிமுகத்திடலுக்குச் செல்ல இதுதான் நேரம்“ என தெரிவித்த நிலையில், தற்போது காலிமுகத்திடலை நோக்கிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
அலரி மாளிகைக்கு முன்பாக பதற்றம்; ஊடகவியலாளர் மீது தாக்குதல்!
பதற்றத்தை அடுத்து அலரி மாளிகை முன்பு விசேட அதிரடிப்படையினருடன் பொலிஸார் குவிப்பு







