தமிழர் பகுதியொன்றில் இடம்பெற்ற பாரிய விபத்து... பரிதாபமாக உயிரிழந்த முன்னாள் போராளி!

Sri Lanka Police Batticaloa Death
By Shankar Jan 16, 2025 12:19 AM GMT
Shankar

Shankar

Report

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (15-01-2025) மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது சரமாரி வாள்வெட்டுத் தாக்குதல்!

யாழில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது சரமாரி வாள்வெட்டுத் தாக்குதல்!

தமிழர் பகுதியொன்றில் இடம்பெற்ற பாரிய விபத்து... பரிதாபமாக உயிரிழந்த முன்னாள் போராளி! | Batticaloa Motor Cycle Hit Ltte Ex Combatant Died

குறித்த விபத்தில் வாழைச்சேனை கறுவாக்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய விஜயநாதன் வினோசித் என்பவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி விவகாரம்... சந்தேகநபரின் தாயார் வெளியிட்ட பகீர் தகவல்கள்!

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி விவகாரம்... சந்தேகநபரின் தாயார் வெளியிட்ட பகீர் தகவல்கள்!

உயிரிழந்த குறித்த நபர் வாழைச்சேனை கிரான் வீதியிலுள்ள ஜஸ்பக்றரிக்கு அருகாமையில் உள்ள மதுபானசாலை ஒன்றிலிருந்து சம்பவதினமான நேற்றிரவு 8.30 மணிக்கு வீடு செல்வதற்காக வீதிக்கு நடந்து வந்துள்ளார்.

தமிழர் பகுதியொன்றில் இடம்பெற்ற பாரிய விபத்து... பரிதாபமாக உயிரிழந்த முன்னாள் போராளி! | Batticaloa Motor Cycle Hit Ltte Ex Combatant Died

இந்நிலையில், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னாள் போராளி மீது மோதி விபத்துக்குள்ளானதில் வீதியில் வீழந்து சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கைக்கு வந்த 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ள அவலம்! பிரதி அமைச்சர் தகவல்

இலங்கைக்கு வந்த 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ள அவலம்! பிரதி அமைச்சர் தகவல்

இதையடுத்து, மோட்டார் சைக்கிளை செலுத்தி சந்தேகநபர் அதனை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.

தமிழர் பகுதியொன்றில் இடம்பெற்ற பாரிய விபத்து... பரிதாபமாக உயிரிழந்த முன்னாள் போராளி! | Batticaloa Motor Cycle Hit Ltte Ex Combatant Died

பின்பு பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் கைவிட்டுச் சென்ற மோட்டர் சைக்கிளை மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.    

கொழும்பில் உள்ள குறித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கொழும்பில் உள்ள குறித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US