மட்டகளப்பில் திருமணமான 6 மாதத்தில் விவாகரத்து கோரும் பெண்! வெளியான அதிர்ச்சி காரணம்
திருமணமாகி 6 மாத காலமாகியும் கணவன் தாம்பத்தியத்தில் ஈடுபடாததால் மனைவி விவாகரத்து கோரியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு புறநகர் பகுதியை சேர்ந்த 29 வயதான பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரே விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு (2021) ஒக்ரோபர் மாதம் பெற்றோர் நிச்சயித்த இந்த திருமணம் நடந்துள்ளது. மட்டக்களப்பு நகரப்பகுதியை சேர்ந்த மணமகனும், புறநகர் பகுதியை சேர்ந்த மணமகளும் அரச உத்தியோகத்தர்கள்.
திருமணத்தின் பின்னர் இந்த ஜோடி தேனிலவிற்காக பாசிக்குடா சென்றுள்ள நிலையில், தற்போது மணமகள் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
திருமணம் முடித்து 6 மாதங்கள் ஆகியும், இதுவரை தமக்கிடையில் தாம்பத்தியம் நிகழவில்லையென்றும், கணவர் ஓரினச்சேர்க்கை ஆர்வமுள்ளவர் என்பதை பின்னரே தெரிந்து கொண்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்து வழக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் இடம்பெற்று வருகிறது.