மட்டக்களப்பில் கொள்ளை: பொலிஸாரிடம் வசமாக சிக்கிய திருடர்கள்!
மட்டக்களப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் இன்றையதினம் (02-06-2022) களுவாஞ்சிகுடி – ஒந்தாச்சிமடம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
ஒந்தாச்சிமடம் கிராமத்தின் வீடு ஒன்றிலிருந்து 85000 ரூபா பணமும், ஒரு கையடக்கத் தொலைபேசியும் களவுபோயிருந்தது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ரி.அபேயவிக்கிரமவின் வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் விசாரணை முன்னெடுத்த நிலையில் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குறித்த நபரை நீதிமன்றில் முன்னிறுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.